செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை தொடர் அறிவிப்பு

Raghavendran

2021 ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. 

2021 ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நியூஸிலாந்தில் ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இறுதி, அரையிறுதி உள்பட மொத்தம் 31 ஆட்டங்கள் இதில் இடம்பெறும். 

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூஸிலாந்தில் மீண்டும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறும் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இதில் தரவரிசையில் முதல் 4 இடங்களைப் பெற்றுள்ள அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுவிடும். அடுத்த 3 இடங்களில் உள்ள அணிகள் வங்கதேசம், அயர்லாந்து ஆகிய அணிகளுடன், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசிய பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளைச் சேர்ந்த வெற்றிபெற்ற அணிகளுடன் தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதும். 

தற்போதைய தரவரிசையின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 22 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 22 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், இந்தியா 16 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 16 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT