செய்திகள்

500 ரன்களுடன் டேவிட் வார்னர் புது சாதனை!

Raghavendran

ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உலகக் கோப்பையில் 500 ரன்கள் குவித்ததுடன் புது சாதனைப் படைத்தார்.

2019 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர், இங்கிலாந்துடனான ஆட்டத்தில் 53 ரன்கள் விளாசினார். இதன்மூலம் மொத்த ரன் எண்ணிக்கை 500-ஐ கடந்தது. 

இதன்காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3-ஆவது ஆஸி. வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக, மேத்யூ ஹேடன் 659 ரன்களும், ரிக்கி பாண்டிங் 539 ரன்களும் எடுத்துள்ளனர். இவை இரண்டுமே 2007 உலகக் கோப்பைத் தொடரின் போது எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஜம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே உலகக் கோப்பைத் தொடரில் இருமுறை 500 ரன்களைக் கடந்தவர் என்ற அரிய சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். 1996-ஆம் ஆண்டில் 523 ரன்களும், 2003-ஆம் ஆண்டில் 673 ரன்களும் குவித்துள்ளார். அதிலும் 2003-ல் குவித்த 673 ரன்கள் தான் இன்றுவரை உலகக் கோப்பைத் தொடர்களில் ஒரு பேட்ஸ்மேனால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த பேட்ஸ்மேன்களின் விவரம் பின்வருமாறு:

  • சச்சின் டெண்டுல்கர் - 673 (2003)
  • மேத்யூ ஹேடன் - 659 (2007)
  • மஹேல ஜெயவர்தன - 548 (2007)
  • மார்டின் கப்டில் - 547 (2015)
  • குமார் சங்ககாரா - 541 (2015)
  • ரிக்கி பாண்டிங் - 539 (2007)
  • திலகரத்ன தில்ஷன் - 500 (2011)
  • டேவிட் வார்னர் - 500* (2019)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT