செய்திகள்

பேர்ஸ்டோ சதம்: இங்கிலாந்து அதிரடி துவக்கம்

இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சதமடித்தார்.

Raghavendran

இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சதமடித்தார்.

2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. பர்மிங்ஹாமில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஜோடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியது. ஜேஸன் ராய் 57 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து ஆடிய ஜானி பேர்ஸ்டோ சதம் விளாசினார். 10 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசி 108 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் இது 8-ஆவது சதமாகும். மேலும் உலகக் கோப்பையில் பேர்ஸ்டோவின் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT