செய்திகள்

45 ரன்களுக்குச் சுருண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி: டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணி 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

எழில்

மிகவும் பரபரப்பாக நடைபெற்றது ஒருநாள் தொடர். ஆனால் அதற்கு முற்றிலும் வேறுவிதத்தில் நடைபெற்று வருகிறது டி20 தொடர். 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எளிதாக வீழ்த்தி டி20 தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

செயிண்ட் கிட்ஸ் - பெஸ்செட்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. ரூட் 55 ரன்கள் எடுத்தபிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பில்லிங்ஸ். அவர் 47 பந்துகளில் 3 சிக்ஸர் 10 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹெட்மையரும் பிராத்வெயிட்டும் தலா 10 ரன்கள் எடுத்தார்கள். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இங்கிலாந்தின் ஜார்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்று டி20 தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி. 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இதே மைதானத்தில் திங்கள் அன்று நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

தனுசு ராசிக்கு மனமகிழ்ச்சி: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

SCROLL FOR NEXT