செய்திகள்

35 வயதுக்குப் பிறகு இரட்டைச் சதம் அடித்த டெய்லர்: புதிய சாதனை!

எழில்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் இரட்டைச் சதமெடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். 

வெலிங்டனில் நடைபெற்று வரும் டெஸ்ட் ஆட்டம் முதல் இரு நாள்களில் மழையால் பாதிக்கப்பட்டது. மூன்றாவது நாளன்றுதான் முதல் பந்து வீசப்பட்டது. முதலில் ஆடிய வங்கதேச அணி, 61 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 74 ரன்கள் எடுத்தார். நியூஸி. தரப்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளும் போல்ட் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து அணி, 84.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் 74 ரன்களும் நிகோல்ஸ் 107 ரன்களும் எடுத்த நிலையில் நான்காவதாகக் களமிறங்கிய ராஸ் டெய்லர் 212 பந்துகளில் 4 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி, 221 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பிறகு 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4-வது நாள் முடிவில், 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 141 ரன்கள் பின்தங்கியுள்ளது.

35-வது வயதுக்குப் பிறகு இரட்டைச் சதமெடுத்த நியூஸிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் டெய்லர். இதற்கு முன்பு, 33 வயதில் நவம்பர் 2014-ல் ஷார்ஜாவில் மெக்கல்லம் இரட்டைச் சதமெடுத்த சாதனையை டெய்லர் முறியடித்துள்ளார். மேலும் இது டெய்லரின் 18-வது சதம். இதன்மூலம் அதிக சதங்கள் அடித்த நியூஸிலாந்து வீரர்களில் மார்டின் குரோவைத் தாண்டி (17 சதங்கள்) இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அதிக டெஸ்ட் சதங்கள்: நியூஸிலாந்து வீரர்கள்

20 - கேன் வில்லியம்சன்
18 - ராஸ் டெய்லர்
17 - மார்டின் குரோவ்

அதிக இரட்டைச் சதங்கள் - நியூஸிலாந்து வீரர்கள்

4 மெக்கல்லம்
3 பிளெமிங்
3 ராஸ் டெய்லர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT