செய்திகள்

இந்தியன்வெல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் கெர்பர், பெலிண்டா

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் அரையிறுதிக்கு ஏஞ்சலிக் கெர்பர், பெலிண்டா பென்கிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

DIN


இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் அரையிறுதிக்கு ஏஞ்சலிக் கெர்பர், பெலிண்டா பென்கிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸை 7-6 6-3 என்ற நேர் செட்களில் வென்றார் ஜெர்மனியின் கெர்பர். 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் கெர்பர் இங்கு முதல் பட்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.
மற்றொரு காலிறுதியில் பெலிண்டா 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார். அரையிறுதியில் கெர்பர்-பெலிண்டா மோதுகின்றனர். 
ஆடவர் பிரிவில் உலகின் 7-ஆம் நிலை வீரர் டொமினிக் தீம் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவருக்கு எதிராக ஆடவிருந்த கெயின் மொன்பில்ஸ், காயம் காரணமாக விலகினார். அரையிறுதியில் ரனோயிக்கை எதிர்கொள்கிறார் தீம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT