செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசி., இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு 

காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

சென்னை: காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி இடம் பிடித்திருந்தார். கடந்த வாரம் ஐ.பி.எல் 12-ஆவது ஸீஸன் துவங்கிய நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரின்போது லுங்கி நிகிடி காயம் அடைந்தார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் யாரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யாமல் இருந்தது.

அதேநேரம் சொந்தக் காரணத்திற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியும்  அணியில் இருந்து விலகினார்.  இதன்காரணமாக வேகப்பந்து வீச்சுத் துறையில் சென்னை அணி பலவீனமாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் காயமடைந்த லுங்கி நிகிடிக்குப் பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலெஜின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT