செய்திகள்

வயதானோர் அணியாகி விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்: ஸ்டீபன் பிளெம்மிங்

DIN


வயதானோர் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறி விட்டதால் மீண்டும் அதை கட்டமைக்க வேண்டியுள்ளது என அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியுள்ளார்.
அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
பேட்டிங் சொதப்பலாக அமைந்து விட்டது. வயதானோர் அணியாக மாறி விட்ட சிஎஸ்கேவை மீண்டும் கட்டமைக்க வேண்டியுள்ளது. வயது சராசரி 34 ஆக உள்ள நிலையில், கடந்த ஆண்டு சீசனில் பட்டம் வென்றோம். எனினும் நடப்பு சீசனில் பேட்டிங் எடுபடவில்லை. ஒருமுறை பட்டம் வென்று, அடுத்த ஆண்டு இரண்டாம் இடம் பெற்றால் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக ஆடியுள்ளோம் என்பதே பொருளாகும். உலகக் கோப்பை போட்டி முடிந்து தோனி திரும்பியவுடன் அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கும்.
மற்ற அணிகளில் திறமை மிக்க புதிய இளம் வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னை அணிக்கும் புதிய வீரர்களை அடையாளம் காண வேண்டும். பவுலர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். 
சென்னை மைதான பிட்சும் ஒத்துழைக்கவில்லை. பிட்சை அறிந்து ஆடுவது மிகவும் சிரமமாக இருந்தது. பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்து விட்டது. எனினும் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை நாங்கள் போராடித் தான் தோற்றோம். 
தோனிக்கு ரன் அவுட் தரும் முடிவு நீண்ட நேரம் ஆகியது. அதுவும் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. கடைசி ஓவரில் 9 ரன்கள் என்பது எடுக்கக் கூடிய ஸ்கோர் தான் என்பதை அறிவோம். வாட்ஸன் சோர்ந்து விட்டார். மலிங்கா அபாரமாக பந்துவீசினார் என்றார் பிளெம்மிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT