முகப்பு
செய்திகள்

மூன்று வகை செஸ் போட்டிகளையும் வென்று புதிய சாதனை படைத்துள்ள 19 வயது தமிழக வீரர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், கடந்த டிசம்பர் மாதம் தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:01 AM
பகிர்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், கடந்த டிசம்பர் மாதம் தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில் தேசிய அளவிலான ரேபிட், பிளிட்ஸ் வகை செஸ் போட்டிகளையும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். 

ஜலந்தரில் நடைபெற்ற ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வகைப் போட்டிகளை வென்றுள்ளார் அரவிந்த் சிதம்பரம். 11 சுற்றுகளில் 10.5 புள்ளிகளைப் பெற்று ரேபிட் பட்டத்தையும் 10 புள்ளிகளுடன் பிளிட்ஸ் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார். இதன் மூலம் கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் வகை செஸ் போட்டிகளை ஒரே சமயத்தில் வென்றுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை அரவிந்த் சிதம்பரம் பெற்றுள்ளார். அவருடைய இந்தச் சாதனைக்கு விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். 

மதுரையைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், 8 வயதில் தந்தையை இழந்துள்ளார். அதன்பிறகு செஸ் விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்த சென்னைக்கு மாறினார். 2011 முதல் அரவிந்த் சிதம்பரத்துக்கு பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் பயிற்சியளித்து வருகிறார். 2015-ல் 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் அரவிந்த் சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.