செய்திகள்

சச்சினின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த 15 வயது இந்திய வீராங்கனை!

DIN


மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மா அரைசதம் அடித்ததன்மூலம், சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தானா மற்றும் ஷஃபாலி வெர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். ஷஃபாலி வெர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தானா 46 பந்துகளில் 11 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஷஃபாலி வெர்மா அரைசதம் அடித்ததன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனையை இவர் 15 வயது 285 நாட்களில் புரிந்துள்ளார். 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் அரைசதத்தை 16 வயது 214 நாட்களில் அடித்தார். அதுவே கடந்த 30 ஆண்டுகளாக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை தற்போது ஷஃபாலி வெர்மா முறியடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT