செய்திகள்

முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியா: இன்றுடன் முடிகிறதா இந்தூர் டெஸ்ட்?

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி, 22 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

எழில்

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 

இந்தியப் பந்துவீச்சாளா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். 2-ம் நாளின் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்தது. ஜடேஜா 60, உமேஷ் யாதவ் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 343 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இந்நிலையில் இந்திய அணியின் இன்னிங்ஸை 493/6 ரன்களுடன் டிக்ளேர் செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. காலை வேளை வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்த எண்ணி இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

முதல் 5 ஓவர்கள் வரை வங்கதேசத் தொடக்க வீரர்களால் கவனமாக விளையாட முடிந்தது. பிறகு, இம்ருல் கைஸ் 6 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதே ஓவரில் மொமினுல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்த டிஆர்எஸ்-ஸின் உதவியை நாடி தோல்வியடைந்தது இந்திய அணி. அடுத்த ஓவரில் ஷத்மன் இஸ்லாமை 6 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார் இஷாந்த் சர்மா. பிறகு மொமினுல் ஹக்கை வீழ்த்த மற்றொருமுறை டிஆர்எஸ்-ஸின் உதவியை நாடி வெற்றி பெற்றார் கோலி.  ஷமி, 7 ரன்களில் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். முகமது மிதுன் 18 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேச அணியின் ஸ்கோர், 44/4.

இந்த டெஸ்டில் இந்திய அணி ஸ்லிப் கேட்சுகளைப் பிடிப்பதில் மோசமாக உள்ளது. இன்று, முஷ்ஃபிகுர் ரஹிம் அளித்த கேட்சை ஸ்லிப் பகுதியில் தவறவிட்டார் ரோஹித் சர்மா. முஷ்பிகுர் ரஹிமும் மஹ்முதுல்லாவும் உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட்டுகள் விழாமல் முறையே 9 மற்றும் 6 ரன்களை எடுத்தார்கள். 

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி, 22 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி, 283 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் இன்றுடன் முடியும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT