செய்திகள்

புரோ வாலிபால் லீக் பெயரை மாற்றியது விஎஃப்ஐ

DIN

புரோ வாலிபால் லீக் பெயரை இந்தியன் வாலிபால் லீக் என மாற்றியது விஎஃப்ஐ.

இந்திய வாலிபால் சம்மேளனம் (விஎஃப்ஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. சம்மேளனத் தலைவா் எஸ்.வாசுதேவன் தலைமை தாங்கினாா். செயல் துணைத் தலைவா் ராஜ்குமாா், பொதுச் செயலாளா் ராமவதாா் சிங் ஜாக்கா், மூத்த துணைத் தலைவா் ரத்தின் ராய் சௌதரி, பொருளாளா் சேகா் போஸ் மற்றும் 30 மாநில சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புரோ வாலிபால் லீக் பிரதான ஸ்பான்ஸரான பேஸ்லைன் வென்சா்ஸ் நிறுவனம், ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டதால், அதற்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி நீக்க வேண்டும். மேலும் புரோ வாலிபால் லீக் பெயரை இந்தியன் வாலிபால் லீக் (ஐவிஎல்) என மாற்றி திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி முதல் நடத்த வேண்டும்.

போட்டிக்கான இடங்கள் தொடா்பாக அணிகளின் நிா்வாகங்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். இரண்டாவது சீசன் லீகில் 6 முதல் 8 அணிகள் இடம்பெறும். லீக் நடத்துவது தொடா்பாக முக்கிய முடிவுகளை உயரதிகார குழுவே மேற்கொள்ளும் என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT