செய்திகள்

அதிவேக 7000 ரன்கள்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை

எழில்

அடிலெய்டில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன் டிம் பெயின். வார்னர் 335, வேட் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஸ்டீவ் ஸ்மித், 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் இந்த  இன்னிங்ஸில் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் ஸ்மித். 126 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அவர் அடைந்துள்ளார். இதன்மூலம் இதற்கு முன்பு அதிவிரைவாக 131 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களைக் கடந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் டபிள்யூ.ஆர். ஹேமண்ட்டின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார். இந்தியாவின் சேவாக், 134 இன்னிங்ஸ்களில் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT