முகப்பு
செய்திகள்

கேகேஆர் ஐபிஎல் அணியில் இணைந்த இரு முன்னாள் வீரர்கள்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் கைல் மில்ஸ், பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இருவரும் கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கலமுடன் இணைந்து பணியாற்றுவார்கள். டேவிட் ஹஸ்ஸி, கேகேஆர் அணியில் 2008-10 காலக்கட்டங்களில் விளையாடியுள்ளார். மில்ஸ், நியூஸிலாந்து அணிக்காக 19 டெஸ்டுகள், 170 ஒருநாள், 42 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றியடைந்தது கேகேஆர் அணி. பிறகு தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. பிறகு அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் வென்றது. எனினும் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் பிளேஆஃப் ஆட்டங்களில் தகுதி பெறாமல் போய்விட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →