செய்திகள்

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ள மேரி கோம்

எழில்

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 36 வயது மேரி கோம் அரையிறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

6 முறை உலக சாம்பியனான மேரி கோம் 48 கிலோ பிரிவில் பல்வேறு சாதனைகளை புரிந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாா். இந்நிலையில் தற்போது அவா் 51 கிலோ எடை பிரிவுக்கு மாறி விட்டாா்.

இன்று நடைபெற்ற 51 கிலோ எடை பிரிவு காலிறுதிச்சுற்றில் கொலம்பியாவின் வலன்சியா விக்டோரியாவை 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் மேரி கோம். அரையிறுதியில் துருக்கியைச் சேர்ந்த புசெனாஸை எதிர்கொள்கிறார். 

ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கிய உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-வது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார் நட்சத்திர வீராங்கனை மேரி கோம். ஏற்கெனவே 6 முறை உலக சாம்பியன் பட்டமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ள மேரி கோம், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இறுதியாக கடந்த 2018-இல் புது தில்லியில் நடைபெற்ற உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின் தீவிர பயிற்சியில் ஈடுபடாமல் இருந்த மேரி, தற்போது ரஷியாவில் நடைபெறும் உலகக் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் 8-வது முறையாக உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லவுள்ளார் மேரி கோம். கியூபாவைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் சவோன், ஆடவர் குத்துச்சண்டைப் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்றதே இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது 8-வது பதக்கத்தை வெல்வதன் மூலம் உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அதிகப் பதக்கம் வென்ற வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மேரி கோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT