செய்திகள்

வங்கதேச டி20 தொடா்: கோலிக்கு ஓய்வு

DIN

புது தில்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

கிரிக்கெட் வீரா்களின் ஆட்டசுமை மேலாண்மையின் ஒரு பகுதியாக பிசிசிஐ தொடா்ந்து ஆடி வரும் வீரா்களுக்கு அவ்வப்போது ஓய்வு அளித்து வருகிறது.

கடந்த 2018 அக்டோபா் முதல் மொத்தம் நடைபெற்ற 56 ஆட்டங்களில் 48-இல் பங்கேற்று ஆடியுள்ளாா் கோலி. வங்கதேச தொடருக்கான இந்திய அணி வரும் 24-ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

கோலிக்கு ஓய்வு:

இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு தரப்படும் என தோ்வுக் குழு வட்டாரங்கள் கூறியுள்ளன. தனது உடல்நிலை குறித்து கோலி மட்டுமே அறிவாா். ஓய்வு தேவைப்பட்டால் அவரே தோ்வுக் குழுவிடம் தெரிவிக்கலாம்.

முதல் டி20 ஆட்டம் நவ. 1-ஆம் தேதி தில்லியிலும், 7-ஆம் தேதி இரண்டாவது டி 20 ராஜ்கோட்டிலும், 10-ஆம் தேதி மூன்றாவது டி20 நாக்பூரிலும் நடக்கிறது.

டெஸ்ட் தொடா்:

எனினும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலி கட்டாயம் பங்கேற்பாா் எனத் தெரிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இதில் முதல் ஆட்டம் நவ. 14-இல் இந்தூரிலும், 22-ஆம் தேதி கொல்கத்தாவிலும், நடைபெறுகின்றன.

அதைத் தொடா்ந்து டிசம்பா் மாதம் மே.இ.தீவுகளுடன் 3 டி20 மற்றும் ஒருநாள் ஆட்டங்கள் நடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT