செய்திகள்

உமேஷ் பவுன்சரில் காயமடைந்த எல்கர்: மாற்று வீரராக டி புரூய்ன் பேட்டிங்!

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் டீன் எல்கருக்கு மாற்று வீரராக டி புரூய்ன் களமிறங்கியுள்ளார்.

DIN


இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் டீன் எல்கருக்கு மாற்று வீரராக டி புரூய்ன் களமிறங்கியுள்ளார்.

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது. இதன்படி, 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் திணறிய தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டர் 22 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில், 10-வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் திணறிய டீன் எல்கரை அதை ஹெல்மட்டில் வாங்கினார். இதனால், இவர் களத்திலேயே நிலைகுலைந்து போனார். இதையடுத்து, நடுவர்கள் தேநீர் இடைவேளை அறிவித்தனர்.

தொடர்ந்து, தேநீர் இடைவேளையில் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அறிமுக ஆட்டக்காரர் ஜார்ஜ் லிண்டே தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஒரு விக்கெட் முன்னதாக களமிறங்கினார். இதையடுத்து, எல்கருக்குப் பதிலாக மாற்று வீரராக டி புரூய்ன் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது. இவர் முதலிரண்டு ஆட்டங்களில் களமிறங்கிய நிலையில் 3-வது ஆட்டத்தில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது டீன் எல்கருக்கு மாற்று வீரராக 3-வது ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் அவர் களமிறங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT