செய்திகள்

டிவிட்டரில் தீபாவளி வாழ்த்து கூறிய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்: எல்லாம் ஐபிஎல் மகிமை!

DIN


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தீபாவளி பண்டிகைக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கிறிஸ் கெயில் போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித்:

இந்திய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

டேவிட் வார்னர்:

தீபாவளி வாழ்த்து கூறிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கிறிஸ் கெயில்:

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

மைக்கேல் கிளார்க்:

தீபாவளி வாழ்த்து கூறிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய ஐபிஎல் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். இதனால், இவர்களுக்கு இந்திய ரசிகர்கள் ஏராளம். ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்குபெறும், பங்குபெற்றுள்ள பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரண்டாவது வீடாக தங்களது குறிப்பிட்ட ஐபிஎல் அணியின் ஊரையே குறிப்பிடுவார்கள். அந்த பழக்கத்தில் இந்தியப் பண்டிகைக்கு தற்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், வர்ணணைக்காக நிறைய நேரம் இந்தியாவில் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT