செய்திகள்

கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட்: பிசிசிஐ முடிவு!

கொல்கத்தா டெஸ்டை பகலிரவு டெஸ்டாக நடத்தலாம் என பிசிசிஐ எங்களிடம் தகவல் தெரிவித்துள்ளது. நாங்கள் யோசித்து எங்கள் முடிவைத் தெரிவிப்போம்.

எழில்

அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டை பகலிரவு ஆட்டமாக நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றதில்லை. அதனால் இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெறவேண்டும் என்று பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி அக்ரம் கான் கூறியதாவது: கொல்கத்தா டெஸ்டை பகலிரவு டெஸ்டாக நடத்தலாம் என பிசிசிஐ எங்களிடம் தகவல் தெரிவித்துள்ளது. நாங்கள் யோசித்து எங்கள் முடிவைத் தெரிவிப்போம். இரு நாள்களுக்கு முன்பு பிசிசிஐயிடமிருந்து இதுகுறித்துக் கடிதம் வந்தது. நாங்கள் ஓரிரு நாள்களில் எங்கள் பதிலை அளிப்போம் என்று கூறியுள்ளார். 

முதல்  டெஸ்ட், இந்தூரில் நவம்பர் 14 அன்றும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொல்கத்தாவில் நவம்பர் 22 அன்றும் தொடங்கவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT