செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இந்த இளம் வீரர் ஆச்சர்யப்படுத்துவார்: பாகிஸ்தான் பயிற்சியாளர் நம்பிக்கை

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், நவம்பர் 21 அன்று தொடங்கவுள்ளது.     

எழில்

5 முதல்தர ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள 16 வயது நசீம் ஷா, ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட நசீம் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெற்ற 9-வது இளம் வீரர் என்கிற பெருமையை அடைவார். மேலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் விளையாடிய இளம் வீரர் என்கிற மற்றொரு பெருமையும் அவருக்குக் கிடைக்கும். நசீம் ஷா குறித்து மிஸ்பா கூறியதாவது:

வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆஸ்திரேலியாவில், சூழலுக்கு ஏற்ப நசீம் ஷா பந்துவீச வேண்டும். எல்லோருக்கும் அவர் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று எப்படிப் பந்துவீசுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக அவர் பந்துவீச வேண்டும். புதிய மற்றும் பழைய பந்துகளில் அவர் சிறப்பாகப் பந்துவீசுவார். முதல்தர ஆட்டங்களில் அவர் அதை நிரூபித்துள்ளார். சரியாகப் பந்துவீசினால் அவருடைய வேகம் பேட்ஸ்மேன்களை ஆச்சர்யப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், நவம்பர் 21 அன்று தொடங்கவுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT