செய்திகள்

2020 ஒலிம்பிக்ஸ் போட்டி: தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் ஹாக்கி அணி!

2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 1-6 எனத் தோற்றதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது

எழில்

3 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களை வென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறாமல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்த அணி ஏற்கெனவே 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெறவில்லை. 

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்ற 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 1-6 எனத் தோற்றதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது பாகிஸ்தான் ஹாக்கி அணி. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி, 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்துள்ளது. 

1960, 1968, 1984 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தான் ஹாக்கி அணி தங்கங்களை வென்றுள்ளது. கடைசியாக பாகிஸ்தான் அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றது, 1992 பார்சிலோனாவில். அப்போட்டியில் பாகிஸ்தான் ஹாக்கி அணி, வெண்கலம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT