முகப்பு
செய்திகள்

தன் தவறை ஷகிப் அல் ஹசன் உணர்ந்துள்ளார்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

ஷகிப் அல் ஹசன் தவறு செய்தது தெளிவாகத் தெரிகிறது. தன் தவறை அவர் உணர்ந்துள்ளார்.

Updated On : 30 அக்டோபர், 2019 at 11:29 AM
பகிர்:

மேட்ச் ஃபிக்ஸிக் முறைகேடு புரிய அணுகியவா்கள் தொடா்பாக தகவல் தெரிவிக்காத காரணத்துக்காக வங்கதேச டி20, டெஸ்ட் அணி கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு முழு தடையும், 12 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட தடையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது: ஷகிப் அல் ஹசன் தவறு செய்தது தெளிவாகத் தெரிகிறது. தன் தவறை அவர் உணர்ந்துள்ளார். ஐசிசியின் முடிவில் அரசாங்கம் தலையிட முடியாது. எனினும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவருக்குத் துணையாக நிற்கும் என்று கூறியுள்ளார்.

ஷகிப் அல் ஹசனுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மஹ்முதுல்லா டி20 அணியின் கேப்டனாகவும் மொமினுல் ஹக் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.