செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குப் புதிய பந்துவீச்சு ஆலோசகர்!

இங்கிலாந்தின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் டேரன் கோவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எழில்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் டேரன் கோவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் 5 டி20, 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்களுக்கான ஆலோசகராக டேரன் கோவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

49 வயது டேரன் கோவ், இங்கிலாந்து அணிக்காக 58 டெஸ்டுகள், 159 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2008-ல் ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்து வானொலி ஒன்றில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றியுள்ளார். நியூஸிலாந்துத் தொடருக்குப் பிறகு இங்கிலாந்துப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக டேரன் கோவ் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்!” நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!

"திருச்சியில் திரள்வோம் . . திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்": அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!

தோழர் நல்லகண்ணு புகழ் வாழ்க! - ப.சிதம்பரம்

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

SCROLL FOR NEXT