குடும்ப வன்முறை வழக்கு தொடர்பாக, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களில் சரணடைய வேண்டும் என்று அலிப்பூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
முகமது ஷமியின் மனைவி ஹாஸின் ஜஹான் சமூகவலைதளம் மூலம் அவர் மீது பல்வேறு புகார்களை சுமத்தி இருந்தார். மேலும், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் ஷமி மீது கொல்கத்தா போலீஸிடம் புகார் செய்தார். இருந்தபோதிலும், தன் மீதான புகார்களை ஷமி மறுத்து வருகிறார்.
இதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் 498ஏ, 354ஏ பிரிவுகளின் கீழ் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹாசித் அஹமது ஆகியோருக்கு எதிராக 15 நாட்களில் சரணடையுமாறு அலிப்பூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.