செய்திகள்

2-வது டெஸ்டிலும் வெற்றியை நோக்கி நகரும் இந்திய அணி! மீண்டும் தடுமாறும் மே.இ. தீவுகள் அணி!

எழில்

2-வது டெஸ்டை நான்கு நாள்களில் முடிக்க விராட் கோலிக்கு ஆர்வம். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 468 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நிலையில் 3-வது நாளின் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் முதலில் விளையாடிய இந்திய அணி, 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் ஆனது. இந்திய அணித் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்து அசத்தினார். இந்திய கேப்டன் கோலி மீண்டும் பேட்டிங் செய்வதையே விரும்பினார். ஆனால் ஆரம்பத்தில் 57 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. பிறகு ஜோடி சேர்ந்த ரஹானேவும் விஹாரியும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு இருவருமே அரை சதமெடுத்தார்கள். இந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 64, விஹாரி 53 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-வது டெஸ்டை வெல்ல, 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வழக்கம்போல இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள மே.இ. தீவுகள் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். இதனால் 3-வது நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. மீதம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் அந்த அணி 423 ரன்கள் எடுக்கவேண்டும். பிராவோ 18, ப்ரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதனால் 2-வது டெஸ்டையும் வென்று தொடரை முழுமையாக வெல்லும் நிலையில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT