பந்தை பவுண்டரிக்கு விரட்டும் லாபஸ்சாக்னே. 
செய்திகள்

ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா - 170/3

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. 

DIN


ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. 
மான்செஸ்டர் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக கிரெய்க் ஓவர்டன் சேர்க்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலிய அணியில், உஸ்மான் கவாஜாவுக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணிக்குத் திரும்பியுள்ளார். 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்யத் தீர்மானித்து. அணியின் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர் களம் கண்டனர்.  இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக வார்னர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அவர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை, ஜானி பேர்ஸ்டோவ் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
அடுத்து களம் கண்ட மார்னஸ் லாபஸ்சாக்னே நிதானமாக ஆடி ரன்களை சேகரித்து வந்தார். இந்நிலையில் 7-ஆவது ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய கடைசி பந்தில் மார்கஸ் ஹாரிஸ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு பவுண்டரி உள்பட 13 ரன்கள் எடுத்திருந்தார். 
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், லாபஸ்சாக்னேவுடன் இணைந்தார். இந்தக் கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தி வந்தது. இந்நிலையில் லாபஸ்சாக்னே 10 பவுண்டரிகள் உள்பட 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில், ஸ்மித் 7 பவுண்டரிகள் உள்பட 60, டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 2, கிரெய்க் ஓவர்டன் 1 விக்கெட் எடுத்திருந்தனர். 
முதல் நாளில் மழையால் அவ்வப்போது ஆட்டம் தடைப்பட்டு, பின்னர் தொடர்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT