முகப்பு
செய்திகள்

ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதால் பலன் எதுவும் இல்லையா?: தேர்வுக்குழுவினரிடம் கேள்வி எழுப்பும் வீரர்!

தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டிக்கு ஷெல்டன் ஜாக்சன் தேர்வாகவில்லை. எனினும்...

செய்திகள்

ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதால் பலன் எதுவும் இல்லையா?: தேர்வுக்குழுவினரிடம் கேள்வி எழுப்பும் வீரர்!

தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டிக்கு ஷெல்டன் ஜாக்சன் தேர்வாகவில்லை. எனினும்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

2012-13 முதல் செளராஷ்டிரா அணி மூன்று தடவை ரஞ்சி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. எனினும் இந்திய ஏ அணிக்கு செளராஷ்டிர அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டைக் கூறியுள்ளார் செளராஷ்டிர வீரர் ஷெல்டன் ஜாக்சன்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது: ரஞ்சி இறுதிப் போட்டிக்கு செளராஷ்டிர அணி தகுதி பெற்றது. எனினும் இந்திய ஏ அணி விளையாடும் தொடர்களில் செளராஷ்டிர வீரர்கள் இடம்பெறவில்லை. எனவே ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதால் பலன் எதுவும் இல்லையா அல்லது சிறிய அணிகளின் சாதனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லையா? கடந்த 5 வருடங்களில் செளராஷ்டிரா அணி மூன்று தடவை ரஞ்சி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் அதனால் எந்த வீரருக்கும் பலனில்லை. இதைக் கேள்வி கேட்கக்கூடாது என நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன். ஆனால் இதற்கான காரணத்தைக் கேட்டு நாங்கள் எதில் பின்தங்குகிறோம் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இல்லாவிட்டால் எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றுவிடும். இந்த விஷயத்தில் தேர்வுக்குழுவினர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். 

தற்போது நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டிக்கு ஷெல்டன் ஜாக்சன் தேர்வாகவில்லை. எனினும் செளராஷ்டிர அணியைச் சேர்ந்த தர்மேந்திரசிங் ஜடேஜா, உனாட்கட் போன்றோர் துலீப் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார்கள். எனினும் இருவரும் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியில் தேர்வாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →