செய்திகள்

ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட்: ஆஸி.க்கு வெற்றி வாய்ப்பு

DIN

ஆஷஸ் தொடரின் 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 497-8 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்திருந்தது.
 நான்காம் நாளான சனிக்கிழமை இருவரும் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களுக்கும், பேர்ஸ்டோ 17ரன்களுக்கும் வெளியேறினர்.
 ஜோப்ரா ஆர்ச்சர் 1, ஸ்டுவர்ட் பிராட் 5 ரன்களுடன் அவுட்டான நிலையில், ஜோஸ் பட்லர் மட்டுமே கடைசியில் நிலைத்து ஆடி 41 ரன்களை சேர்த்து வெளியேறினார். ஜேக் லீச் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 107 ஓவர்களில் 301 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
 ஆஸி. அபார பந்துவீச்சு: ஆஸி. தரப்பில் ஜோஷ் ஹேஸல்வுட் 4-57, பேட் கம்மின்ஸ் 3-60, ஸ்டார்க் 3-80 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
 இதையடுத்து ஆஸி. அணி 196 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 ஆஸி. 115/4: பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸி. அணி ஆரம்பத்திலேயே அதிர்ச்சியை சந்தித்தது. அதிரடி வீரர் டேவிட் வார்னை எல்பிடபிள்யு முறையில் டக் அவுட்டாக்கினார் ஸ்டுவர்ட் பிராட். ஆஷஸ் தொடரில் தொடர்ந்து 5-ஆவது முறையாக வார்னரை அவுட்டாக்கியுள்ளார் பிராட். மார்கஸ் ஹாரிஸ் 6, மார்னஸ் லேபுச்சேன் 11, டிராவிஸ் ஹெட் 12 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர்.
 ஸ்மித் 26-ஆவது அரைசதம்: மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஸ்டீவ் ஸ்மித் தனது 26-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார்.
 33 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. ஸ்மித் 58, வேட் 22 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.
 ஸ்மித் 82 ரன்களுடனும், மேத்யூ வேட் 34, ரன்களுடனும் வெளியேறினர். டிம் பெயின் 23, ஸ்டார்க் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 186/6 டிக்ளேர்: 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்திருந்த ஆஸி.அணி தனது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
 இதையடுத்து இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 383 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ûஸ ஆடத் தொடங்கிய இங்கிலாந்து தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. பேட் கம்மின்ஸ் அதிரடி பந்துவீச்சில் ரோரிபர்ன்ஸ், ஜோ ரூட் டக் அவுட்டாயினர்.
 ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. ஜேஸன் ராய், ஜோ டென்லி களத்தில் இருந்தனர்.
 ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் 2-8 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT