செய்திகள்

ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது ஆஸ்திரேலியா

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தை 185 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி தொடரையும் 2-1 என கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது.
ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 497/8 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
இதையடுத்து தனது 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய ஆஸி. அணி 186/6 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 383 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,   ஆஸி. பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
ஜோ டென்லி மட்டுமே 53 ரன்களை எடுத்தார். ரோரி பர்ன்ஸ் 0, ஜோ ரூட் 0, ஜேஸன் ராய் 31, பென் ஸ்டோக்ஸ் 1, ஜானி பேர்ஸ்டோ 25 ரன்களுடன் அவுட்டாயினர். 
இங்கிலாந்து அணி 84.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது.
ஜோஸ் பட்லர் 34, கிரெய்க் ஓவர்டன் 21 ரன்களுக்கும், ஆர்ச்சர் 1, ஜேக் லீச் 12 ரன்களுடனும் வெளியேறினர். இறுதியில் 91.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் அற்புதமாக பந்துவீசி 4-43, ஹேஸல்வுட் 2-31, நாதன் லயன் 2-51 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
185 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி, தொடரிலும் 2-1 என முன்னிலை பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT