செய்திகள்

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து 294

ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

DIN


ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களுடன் நிறைவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை ஜோஸ் பட்லர், ஜேக் லீச் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். மேலும் 6 ரன்கள் சேர்த்து பட்லர் 70 ரன்களுடன் அவுட்டானார்.  ஜேக் லீச்சும் 21 ரன்களுடன் மார்ஷ் பந்தில் போல்டானார்.
இறுதியில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
ஆஸி. தரப்பில் மிச்செல் மார்ஷ் அபாரமாக பந்துவீசி 5-46 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், 3, ஹேஸல்வுட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய ஆஸி. அணியும் திணறியே ரன்களை சேர்த்து வருகிறது. தேநீர் இடைவேளையின்போது, 44 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. வார்னர் 5, மார்கஸ் ஹாரிஸ் 3, மார்னஸ் லேபுச்சேன் 48, மேத்யூ வேட் 19 ரன்களுக்கு அவுட்டாகினர். 
ஸ்மித் அபார சதம்:
அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து ஆடி 27-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 59 ரன்களுடனும், மார்ஷ் 12 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரொம்ப பார்க்காதீங்க... பூனம் பாண்டே!

புது டிரெண்ட்... வைஷ்ணவி!

கொஞ்சம் ஹைட் அன்ட் ஸீக், கேமராவுக்கு... தமன்னா!

லயோலா கல்லூரி, சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி!

நன்றி என்பது உள்ளொளி... சீரத் கபூர்!

SCROLL FOR NEXT