செய்திகள்

தொடரை சமன் செய்யுமா இங்கிலாந்து? ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் இலக்கு

DIN


ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 294 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, ஜோ டென்லி மற்றும் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் வலுவான முன்னிலைப் பெற்றது. இதன்மூலம், 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், ஜேக் லீச் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4-வது நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலேயே ஆர்ச்சர் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய ஸ்டுவர்ட் பிராட் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ரன்களை சற்று உயர்த்தினார். இதையடுத்து, லயான் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற லீச் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், 2-வது இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், லயான் 4 விக்கெட்டுகளையும், சிடில், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த கடின இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தற்போது களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT