செய்திகள்

வியத்நாம் ஓபன்: செளரவ் சாம்பியன்

DIN

வியத்நாம் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர் செளரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக பாட்மிண்டன் சம்மேளனம் பிடபிள்யுஎப் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டி ஹோசிமின்சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செளரவ் வர்மா-சீனாவின் சுன் பெய் ஸியாங்கும் மோதினர்.
இதில் முதல் கேமை 21-12 என செளரவ் கைப்பற்றினார்.
எனினும் இரண்டாவது கேமில் சீன வீரர் சுன் ஆதிக்கம் செலுத்தி 21-17 என கைப்பற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த செளரவ் இறுதி கேமில் தொடக்கம் முதலே தீவிரமாக ஆடி 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நிகழாண்டில் ஏற்கெனவே அவர் ஹைதராபாத் ஓபன், ஸ்லோவேனியன் போட்டிகளில் பட்டம் வென்றிருந்தார். நடப்பு தேசிய சீனியர் சாம்பியனாகவும் செளரவ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜிய போட்டி: லக்ஷயா சாம்பியன்: பெல்ஜிய சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற கேம் கணக்கில் டென்மார்க்கின் முன்னணி வீரர் விக்டர் வென்ட்செனை வீழ்த்தி பட்டம் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT