செய்திகள்

புரோ கபடி லீக்: யுபி யோத்தா அணி வெற்றி

DIN

புரோகபடி லீக் ஆட்டம் ஒன்றில் யுபி யோத்தா அணி 38-32 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
விவோ புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது புணேயில் நடைபெறுகின்றன. திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தன.
முதல் பாதி ஆட்ட முடிவில் யுபி அணி 20-13 என முன்னிலை பெற்றிருந்தது. 
அந்த அணியில் ரைடர்கள் சுரிந்தர் கில் 7, ஸ்ரீகாந்த் ஜாதவ் 8, ரிஷங்க் தேவதிகா 8 புள்ளிகளை குவித்தனர். ஜெய்ப்பூர் அண தரப்பில் தீபக் ஹூடா மட்டுமே போராடி 13 புள்ளிகளை குவித்தார். 
இந்த வெற்றி மூலம் யுபி யோத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT