செய்திகள்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்...

எழில்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலமாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதியடைந்துள்ளார்.

கஜகஸ்தானின் நுர்சுல்தான் நகரில் நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில், முதலில் உக்ரைனைச் சேர்ந்த யுலியாவை 5-0 எனத் தோற்கடித்தார் வினேஷ் போகட். அடுத்ததாக, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாராவை 8-2 எனத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நுழைந்துள்ளார். 

இதன்மூலமாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்த முதல் இந்திய மல்யுத்த வீரர் என்கிற பெருமையை வினேஷ் பெற்றுள்ளார். அடுத்ததாக கிரீஸைச் சேர்ந்த இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மரியா ப்ரவோலராகியைச் சந்திக்கவுள்ளார். இதில் வெல்லும் வீராங்கனைக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும். 

வினேஷ் போகட், 2018 காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT