செய்திகள்

உலக ஆடவர் குத்துச்சண்டை அரையிறுதியில் அமித் பங்கால், மணிஷ்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் தகுதி பெற்றுள்ளனர்

DIN

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் பிலிப்பைன்ஸின் கார்லோ பாலத்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஏற்கெனவே ஜகார்த்தா ஆசியப் போட்டி அரையிறுதியிலும் கார்லோவை வீழ்த்தியிருந்தார் அமித்.
மற்றொரு ஆட்டத்தில் 63 கிலோ பிரிவில் இந்தியாவின் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் பிரேசில் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் இருவரும் குறைந்தது ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். மற்றொரு வீரரான சஞ்சித் 91 கிலோ பிரிவில் 1-4 என டோரஸிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

SCROLL FOR NEXT