செய்திகள்

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ஹிமா தாஸ் விலகல்!

எழில்

முதுகு வலி காரணமாகத் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

கத்தார் நாட்டின் டோஹாவில் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 27ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.  கடந்த வாரம் நடைபெற்ற இந்திய தடகள சம்மேளனம் ஏஎப்ஐ தேர்வுக் குழுக் கூட்டத்தில் முதல் கட்டமாக பட்டியல் வெளியிடப்பட்டது. தனது விருப்ப ஓட்டமான 400 மீ-ல் தேர்வு பெற முடியாத ஹிமா தாஸ், மகளிர்  4400, கலப்பு 4400 மீ, தொடர் ஓட்டத்தில் இடம் பெற்றார். இந்நிலையில், முதுகு வலி காரணமாகத் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து இந்தியத் தடகள சங்கம் தகவல் தெரிவித்ததாவது: துரதிர்ஷ்டவசமாக, 2019 தோஹா உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமா தாஸால் கலந்துகொள்ளமுடியவில்லை என்று கூறியுள்ளது. 

கடந்த வருட  ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு முதுகு வலி காரணமாக அவதிப்படுகிறார் ஹிமா தாஸ். ஏப்ரலில் தோஹாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ. ஓட்டப்பந்தயத் தகுதிச்சுற்றில் காயம் காரணமாகப் பாதி ஓட்டத்திலிருந்து விலகினார். பிறகு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை கலந்துகொண்ட போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்றார். எனினும் தற்போது அவரால் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT