செய்திகள்

துளிகள்...

DIN

    குஜராத் மாநிலம், சூரத் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தென்னாப்பிரிக்கா-போர்டு பிரசிடென்ட் லெவன் மகளிர் அணி  இடையேயான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.


    ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு 2020இல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது 2009ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, பல்வேறு நாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், இம்மாதம் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.


    தாய்லாந்தில் நடைபெற்றுவரும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 16 வயது ஜெரிமி லால்ரின்னுங்கா 10ஆவது இடம் பிடித்தார். மிúஸாரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், இளையோர் ஒலிம்பிக்கில் 62 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்குதலில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


    இந்தியா ஏ அணியும், தென்னாப்பிக்கா ஏ அணியும் விளையாடிய அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் ஆட்டம் டிரா ஆனது. இந்திய வீரர் பிரிய பன்சால் சதம் பதிவு செய்தார்.


    ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜி.சத்தியன் காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சரத் கமல்-சத்தியன் இணை, பதக்கச் சுற்றுக்கு முன்னேற தவறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மனு

திருமங்கலம் விவசாயிக்கு இலவச டிராக்டா் -நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

உயா்கல்வி வழிகாட்டுக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT