செய்திகள்

உலகக் கோப்பை போட்டியில் ஏற்பட்ட ‘சூப்பர் ஓவர்’ குழப்பம்: விதிமுறைகளை மாற்றியது ஆஸ்திரேலியா!

எழில்

2019 உலகக் கோப்பைப் போட்டி சமீபத்தில் நிறைவுபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இரு அணிகளும் 50 ஓவர்கள் ஆடிமுடிந்த நிலையில் ஆட்டம் சமன் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

எனினும் சூப்பர் ஓவர் வழியாக முடிவைக் கண்டடையாமல் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஐசிசியின் விதிமுறைக்குப் பலத்த கண்டனம் எழுந்தது. இதுபோன்ற தர்க்கம் இல்லாத விதிமுறைகளை மாற்றவேண்டும் என்றும் பல தரப்பிலிருந்தும் ஐசிசிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் குழப்பத்தைச் சரிசெய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆடவர் மற்றும் மகளிர் பிக் பாஷ் லீக் டி20 போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இனிமேல் சூப்பர் ஓவர் டை நிலைக்குப் பிறகு பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணி தேர்ந்தெடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சூப்பர் ஓவருக்குப் பிறகும் ஸ்கோர்கள் சமமாக இருந்தாலும் அடுத்ததாக முடிவு எட்டப்படும்வரை சூப்பர் ஓவர்களைக் கொண்டு ஆட்டம் நடைபெறும் என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. எனவே பிக் பாஷ் லீக் டி20 போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் பவுண்டரிகளின் அடிப்படையில் இனிமேல் எந்த அணியாலும் வெற்றி பெற முடியாது. அதேசமயம் லீக் போட்டிகளில் சூப்பர் ஓவருக்குப் பிறகும் முடிவு எட்டப்படவில்லையென்றால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாணியில் ஐசிசியும் விதிமுறையை மாற்றுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT