கோப்புப்படம் 
செய்திகள்

மன்தீப், ஆகாஷ்தீப் அபாரம்: பெல்ஜியமை வென்றது இந்திய ஹாக்கி

பெல்ஜியத்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

DIN


பெல்ஜியத்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெல்ஜியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி பெல்ஜியத்துக்கு எதிராக 3 ஆட்டங்களிலும், ஸ்பெயினுக்கு எதிராக 2 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் மன்தீப் சிங் 39-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து இந்திய அணி நம்பிக்கையளித்தார். இதன்பிறகு, 54-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் மீண்டும் ஒரு கோல் அடிக்க இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலைப் பெற்றது. 

எனினும், பெல்ஜியம் அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட போடமுடியவில்லை. இதன்மூலம், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டி அட்டவணை: 

முதல் போட்டி: பெல்ஜியம் - இந்தியா (இன்றைய போட்டி)

2-வது போட்டி: ஸ்பெயின் - இந்தியா (செப்டம்பர் 28)

3-வது போட்டி: ஸ்பெயின் - இந்தியா (செப்டம்பர் 29)

4-வது போட்டி: பெல்ஜியம் - இந்தியா (அக்டோபர் 1)

5-வது போட்டி: பெல்ஜியம் -  இந்தியா (அக்டோபர் 3)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT