செய்திகள்

ஆப்கானிஸ்தான் பயிற்சியாளராக பிரபல தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் நியமனம்

ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளின் பேட்டிங் பயிற்சியாளராக லான்ஸ் க்ளூஸ்னர் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Raghavendran

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், பிரபல ஆல்-ரவுண்டருமான லான்ஸ் க்ளூஸ்னர் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

2019 உலகக் கோப்பைத் தொடருடன் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் பில் சிம்மன்ஸ் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளராக லான்ஸ் க்ளூஸ்னர் 18 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளின் பேட்டிங் பயிற்சியாளராக லான்ஸ் க்ளூஸ்னர் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தென் ஆப்பிரிக்க உள்ளூர் டால்ஃபின்ஸ் அணி தலைமைப் பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற சிறந்த வீரரான லான்ஸ் க்ளூஸ்னர் வருகை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் துணிச்சலான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. எனவே கடின முயற்சி இருந்தால் உலகின் சிறந்த அணியாக அவர்களால் உயர முடியும். சிறந்த திறமைகளைக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைந்து பணியாற்றுவது கௌரவமளிக்கிறது என்று லான்ஸ் க்ளூஸ்னர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

SCROLL FOR NEXT