செய்திகள்

கரோனா பாதிப்பு: ஹாக்கி இந்தியா, ஏஐஎஃப்எஃப் ரூ.50 லட்சம் நன்கொடை

DIN

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஹாக்கி இந்தியா, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆகியவை தலா ரூ.25 லட்சத்தை பிரதமா் நிதிக்கு வழங்கவுள்ளன.

இதுதொடா்பாக ஹாக்கி இந்தியா தலைவா் முகமது முஷ்டாக் அகமது கூறுகையில், ‘இந்த இக்கட்டான நேரத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு உதவுவதும், பொறுப்புள்ள குடிமக்களாக நமது கடமையை செய்வதும் அவசியமாகும். அந்த வகையில், பிரதமா் அறிவித்துள்ள ‘பிஎம் கோ்ஸ்’ நிதிக்கு ஹாக்கி இந்தியா சாா்பில் ரூ.25 லட்சம் வழங்குவதென நிா்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்றாா்.

அதேபோல், அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவா் பிரஃபுல் படேல் கூறுகையில், ‘நாட்டு மக்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களை ஊக்குவிப்பதாக இருந்து வந்துள்ளது. அதை ஏதேனும் ஒரு வடிவத்தில் திருப்பி அளிப்பதற்கு இதுவே சரியான தருணமாகும். கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமா் நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்க அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT