செய்திகள்

உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்கு தோனியின் சிக்ஸ் மட்டுமா காரணம்?: கெளதம் கம்பீர் காட்டம்!

எழில்

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்று, தோனியின் சிக்ஸ்.

இந்த இரண்டையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. 2011 உலகக் கோப்பை என்றால் தோனி அடித்த அந்த சிக்ஸர் தான். மற்ற எல்லாமே அந்த சிக்ஸருக்குப் பிறகுதான்.

இந்த நாளில்தான் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இதனால் பிரபல கிரிக்கெட் இணையத்தளமான க்ரிக்இன்ஃபோ, தோனியின் சிக்ஸர் அடித்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, இந்த ஷாட், மில்லியன் இந்திய ரசிகர்களைக் கொண்டாட வைத்தது என எழுதியது.

இதைக் கண்டு கடுப்பானார் கெளதம் கம்பீர். அதே இறுதிச்சுற்றில் கம்பீர், 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்த தோனி தான் அந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

உலகக் கோப்பையை ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திய அணியும் பயிற்சியாளர்களும் இணைந்துதான் வென்றார்கள். சிக்ஸர் மீதான உங்கள் அதீத விருப்பத்தைக் கைவிடவேண்டும் என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து தோனியின் ரசிகர்கள் கம்பீரை விமரிசித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT