செய்திகள்

ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக விராட் கோலியை ஆஸி. வீரர்கள் பகைத்துக் கொள்வதில்லை: மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு!

எழில்

கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் ஐபிஎல் ஒப்பந்தத்துக்காக தற்போதைய ஆஸி. வீரர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை என்று ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

வருமானத்தின் அடிப்படையில் சர்வதேச அளவிலும் உள்ளூரில் ஐபிஎல் அளவிலும் இந்திய அணி எந்தளவுக்குச் சக்திமிக்கது என்பதை அனைவரும் அறிவோம். ஆஸ்திரேலியாவும் இதர நாடுகளும் குறிப்பிட்ட காலத்தில் இந்திய அணிக்குப் பிடித்தது போல நடந்துகொண்டார்கள். கோலி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக களத்தில் வாக்குவாதம் செய்ய அஞ்சினார்கள். காரணம், அவர்களுடன் இணைந்துதான் ஐபிஎல்-லில் விளையாட வேண்டும் அல்லவா!

சிறந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் அணிக்குத் தேர்வு செய்கிறார்கள். எனவே வீரர்களும், நான் கோலியுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை. அப்போதுதான் அவர் என்னை பெங்களூர் அணிக்கு ஆறு வாரக் காலத்துக்கு 1 மில்லியன் டாலருக்குத் தேர்வு செய்வார் என நினைக்கிறார்கள் என்று கிளார்க் கூறியுள்ளார்.  

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT