முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து உலகக் கோப்பை வீரர் கரோனா வைரஸால் மரணம்

கரோனோ வைரஸ் தொற்றால் இங்கிலாந்து கால்பந்து வீரர் நார்மன் ஹண்டர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 76.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
(படம் - www.leedsunited.com)
பகிர்:

கரோனோ வைரஸ் தொற்றால் இங்கிலாந்து கால்பந்து வீரர் நார்மன் ஹண்டர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 76.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 13,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனோ வைரஸ் தொற்றால் இங்கிலாந்து கால்பந்து வீரர் நார்மன் ஹண்டர் மரணமடைந்துள்ளார். கடந்த ஏப்ரல் 10 அன்று கரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

இங்கிலாந்து அணி 1966 கால்பந்து உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் நார்மன் இடம்பெற்றிருந்தார். லீட்ஸ் யுனைடெட் கால்பந்து கிளப்புக்காக 726 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நார்மன் ஹண்டரின் மறைவுக்கு லீட்ஸ் கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →