முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய பேட்டை ஏலத்தில் விட கே.எல். ராகுல் முடிவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய பேட்டை ஏலத்துக்கு விட முடிவு செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்.

உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய பேட், கிளவுஸ், கால் காப்புகள், ஹெல்மெட் ஆகியவற்றை ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் ராகுல். ஏலம் வழியாகக் கிடைக்கும் தொகை, அறக்கட்டளையின் உதவியுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5-0 என கைப்பற்றியது இந்தியா. இதில் ராகுல் முக்கிய பங்கு வகித்தாா். 2 அரைசதங்கள் உள்பட 224 ரன்களைக் குவித்தாா். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடிய ராகுல், ஒரு சதம் இரு அரைசதங்களுடன் 361 ரன்கள் எடுத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →