முகப்பு
செய்திகள்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்பந்தத்திலிருந்து இரு முக்கிய வீரர்கள் நீக்கம்

2020-21-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

Updated On : 30 ஏப்ரல், 2020 at 2:44 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:04 PM

2020-21-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய இரு வீரர்களும் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 5 வருடங்களில் முதல் தடவையாக ஒப்பந்தப் பட்டியலில் இருந்து கவாஜா நீக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் மார்னஸ் லபுஷேன், ஒப்பந்தப் பட்டியலில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளார். லபுஷேன், மிட்செல் மார்ஷ், ஆஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேத்யூ வேட் ஆகியோர் ஒப்பந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார்கள். நாதன் கோல்டர் நைல், ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், ஸ்டாய்னிஸ், கவாஜா, ஆஷ்டன் டர்னர் போன்றோர் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

Advertisement

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 வீரர்கள்:

ஆஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெயின், ஜேம்ஸ் பேட்டின்சன், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.