முகப்பு
செய்திகள்

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரட்டும் பாபர் அசாம்

​இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் பாபர் அசாம் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் பாபர் அசாம் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வருகிறார்.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் ஆபித் அலி ஆகியோர் களமிறங்கினர். ஷான் மசூத் நிதானம் காட்ட ஆபித் அலி 16 ரன்களுக்கு ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் அசார் அலி ரன் ஏதும் எடுக்காமல் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, மசூத்துடன் பாபர் அசாம் இணைந்தார். இந்த பாட்னர்ஷிப்பிலும் மசூத் தொடர்ந்து நிதானம் காட்ட, பாபர் அசாம் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரட்டினார். பவுண்டரிகளாக விளாசி வந்த அவர் 70-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை காரணமாக தேநீர் இடைவேளை முன்கூட்டியே எடுக்கப்பட்டது. 41.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 45 ரன்களுடனும், பாபர் அசாம் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →