செய்திகள்

எனக்கு கரோனாவா?: பிரையன் லாரா மறுப்பு

தனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை பிரபல வீரர் பிரையன் லாரா மறுத்துள்ளார்.

DIN

தனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை பிரபல வீரர் பிரையன் லாரா மறுத்துள்ளார்.

131 டெஸ்டுகள், 299 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய லாரா, 2006-ல் ஓய்வு பெற்றார். இந்நிலையில் பிரையன் லாராவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து இன்ஸ்டகிராமில் லாரா தெரிவித்ததாவது:

எனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை நான் படித்தேன். அதைப் பற்றி தெளிவுபடுத்துகிறேன். இந்தச் செய்தி தவறானது மட்டுமல்லாமல், கரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சூழலில் ஒரு சமூகத்தில் இந்தச் செய்தியின் மூலம் பதற்றத்தை உருவாக்கக் கூடாது.

இச்செய்தி தனிப்பட்ட முறையில் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பொறுப்பற்ற தவறான செய்தியால் என் வட்டத்தில் உள்ளவர்கள் வருத்தமடைந்துள்ளார்கள். இதுதான் எனக்குக் கவலையளிக்கிறது. பரபரப்புக்காக வைரஸ் தொற்றைப் பயன்படுத்தக்கூடாது. இப்போதைக்கு கரோனா பாதிப்பு விலகப் போவதில்லை. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT