முகப்பு
செய்திகள்

தோனி ஓய்வு: ஐபிஎல் பந்துவீச்சாளர்களுக்கு இர்பான் பதான் எச்சரிக்கை

பந்துவீச்சாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் எச்சரிக்கை...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் தோனிக்குப் பந்துவீசும்போது பந்துவீச்சாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார் தோனி. 

ஐபிஎல் போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடும்போது, ஓய்வு பெற்ற பந்துவீச்சாளர்கள் இனிமேல் தோனிக்குப் பந்துவீசத் தேவையில்லை என மகிழ்வார்கள். ஏனெனில் அவர் எப்போதும் அதிரடியாக விளையாடக் கூடியவர். 

சிஎஸ்கேவுக்காக விளையாடும்போதும் அப்படித்தான் விளையாடுவார். இந்த ஐபிஎல் போட்டியில் அவருடைய ஆட்டத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். எனவே அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் நான் கூறிக்கொள்வது - எச்சரிக்கையாக இருங்கள் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →