செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 3-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸாம் கேப்டனாக உள்ளார். கடந்த வருடம் கேப்டன் பதவியை இழந்த பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் அணி டி20 அணியில் சர்ஃபராஸ் அகமது இடம்பெற்றுள்ளார். 

டி20 தொடர், ஆகஸ்ட் 28 முதல் நடைபெறவுள்ளது. மூன்று ஆட்டங்களும் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி

பாபர் அஸாம் (கேப்டன்), ஃபகார் ஸமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமிர், நசீம் ஷா, சர்ஃபராஸ் அகமது, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகை! உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்!

கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கும் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடக்கியது திமுக: கே. அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT